செந்தமிழ்சிற்பிகள்

ந.பிச்சமூர்த்தி (1900 - 1976)

ந.பிச்சமூர்த்தி (1900 - 1976)

அறிமுகம்

கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் மற்றும் காமாட்சி அம்மாள் ஆகிய இருவருக்கும் நான்காவது குழந்தையாக 1900ஆம் ஆண்டு ஆகத்து 15 பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டிய மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யும் அளவிற்கு தேர்ச்சி பெற்றவர் சைவ புராணங்கள் செய்தவர்.

பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார் 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராக பணிபுரிந்தார் மற்றும் 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத் துறை அதிகாரியாக பணிபுரிந்தார். 

பிச்சமூர்த்தி நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார் இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. 

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் நல் வாழ்வுக்கான தத்துவ உண்மைகளை காண முயன்றவர் பிச்சமூர்த்தி.

ந. பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். தமிழ் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி”. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி வழக்கறிஞர் பட்டம் பெற்று பணியாற்றிய பிச்சமூர்த்தி இந்து அறநிலையத் துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



பிச்சமூர்த்தியின் படைப்புகள்:

சிறுகதை:

  1. பதினெட்டாம் பெருக்கு (1944)
  2. ஜம்பரும் வேஷ்டியும் (1947)
  3. மோகினி (1951)
  4. குடும்ப ரகசியம் (குறும் புதினம் 1959)
  5. பிச்சமூர்த்தியின் கதைகள் (1960)
  6. மாங்காய்த்தலை (1961)
  7. இரட்டை விளக்கு (1967)
  8. காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள் 1977)

பிச்சமூர்த்தியின் கவிதை தொகுப்பு:

  1. காட்டு வாத்து (1962)
  2. வழித்துணை (1964)
  3. குயிலின் சுருதி (1970)

பிச்சமூர்த்தியின் கட்டுரைத் தொகுதி:

  1. காளி (1946)